‘போதும்.. போதும்.. டைம் ஆயிடுச்சு!’.. நேரலையில் கோலி.. சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த அனுஷ்காவின் ‘வைரல் கமெண்ட்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 03, 2020 09:18 PM

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

anushka sharma suprise comment during kohlis insta interview

இந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலி தனது வீட்டில் இருந்தபடி இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுடன் நேரலையில் பேசிக் கொண்டு இருந்துள்ளார் .

அப்போது கெவின் பீட்டர்சன் கேட்ட பல கேள்விகளுக்கு விராட் கோலி பதிலளித்துக் கொண்டிருந்தார். அதில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளதால் அனுஷ்காவுடன் அதிக நேரத்தை செலவிடுவதாகவும்,  தானும் அனுஷ்காவும் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்ததில்லை என்றும் கெவின் பீட்டர்சனிடம் கோலி தெரிவித்துக் கொண்டிருந்தார்.‌

அப்போது கோலிக்கு அருகே வந்த அனுஷ்கா சர்மா நேரலையில் இருந்த கோலியிடம் வந்து,  “போதும் போதும்.. உங்கள் உரையாடல். நேரமாச்சு சாப்பிட வாங்க” என்று கலாயாக கூறியுள்ளார். பதிலுக்கு கெவின் பீட்டர்சன், “உங்கள் பாஸ் சொல்லிவிட்டார். உங்கள் நேரம் முடிந்தது” என்று

நகைச்சுவையாக கூறி நேரலையை முடித்துக் கொண்டார்.

 

Tags : #VIRATKOHLI