இந்த 'பேச்சு' பேசுறீங்க இல்ல...? 'ஒரு பேட், ஹெல்மெட் எடுத்து தரேன்...' 'கிரவுண்டுக்கு வந்து விளையாடி பாருங்க...' அப்போ தெரியும்...! - 'கேள்வி' கேட்டவர்களை 'பந்தாடிய' கோலி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய (24-10-2021) டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பல வருடங்கள் கழித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த 1992-ஆம் ஆண்டிலிருந்து டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் வெல்லவில்லை. இந்நிலையில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் சிறந்த பவுலிங்கால் இந்தியா 20 ஓவரில் 151 ரன்களை மட்டும் தான் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் எந்த வித விக்கெட்களையும் கொடுக்காமல் 17.5 ஓவர்களிலேயே 152 ரன்களை எடுத்தி வெற்றி வாகையை சூடியது.
இதுவரை 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பையில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, 29 ஆண்டுகளுக்குப்பின் 13-வது முறையில் நேற்று இந்தியாவை வென்றுள்ளது.
கிரிக்கெட் தொடர் முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோலியிடம் 'இந்திய அணிக்கு அதீத தன்னம்பிக்கையுடன் இருந்ததும் பாகிஸ்தான் அணியின் திறமை குறித்து ஆலோசிக்காமல் இருந்தது, தோல்விக்கு காரணமா?' என பாகிஸ்தான் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த விராட் , 'இன்று நடந்து முடிந்த போட்டி மிகச்சிறந்தது என உங்களுக்கும் தெரியும். இப்படியா அப்படியா என யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், ஆலோசனைகள் தரலாம்.
ஆனால், அவர்கள் களத்தில் இருப்பதில்லை. என்னுடைய விருப்பமெல்லாம் களத்துக்கு வாருங்கள், பேட், ஹெல்மெட் அணிந்துகொண்டு விளையாடிப் பாருங்கள். அப்போது தான் களத்தில் என்ன அழுத்தம் இருக்கிறது எனத் தெரியும்.
யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக பாகிஸ்தானையும். இன்றுள்ள சூழலில் உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை கொண்டது.
இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த வெற்றியால் இந்த உலகமே எனக்கும், இந்திய அணிக்கும் முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை அதனால் தோல்வியை தழுவினோம்.
எங்களை விட பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு தொடக்கத்திலேயே 3 விக்கெட்டை வீழ்த்தனர். இந்திய அணி 20 ரன்களுக்கு நாங்கள் 3 விக்கெட்டை இழந்தது. சரியான தொடக்கம் அல்ல. நாங்கள் பந்துவீசும்போது விரைவாக விக்கெட் வீழ்த்த திட்டமிட்டோம், ஆனால் முடியவில்லை. இது கடைசி போட்டியல்ல என்பதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.' என ஆவேசமாக கூறியுள்ளார் கேப்டன் விராட் கோலி.