BIG BREAKING: போட்றா வெடிய...! நான்காவது முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே.! - 'தல' தோனி படை மாஸ்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. அதில் கொல்கத்தா அணியை வென்று நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா காட்டு அடி அடித்தார். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க. அடுத்து களமிறங்கிய மொயின் அலி தனக்கே உண்டான பாணியில் சிக்ஸர்களை பறக்க விட்டார்.
தொடக்க ஆட்டக்காரர் பாப் டுப்ளஸ்ஸி மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த, அது சென்னை அணிக்கு மிக பெரிய பலமாக அமைந்தது. டுப்ளஸ்ஸி 59 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) 86 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி ஆடியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க சுபமான் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது. இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இதில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 5 பவுண்டரி, 3 சிக்சரும் அடங்கும்.
அதே சமயத்தில் நிதானமாக ஆடிய கில் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னுக்கும், சாகிப் அல் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழநதனர்.
இந்த நிலையில் தற்போது 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக பெறுகிறது.

மற்ற செய்திகள்
