'யாரு' ஜெயிப்பா...? 'எழுதி வச்சுக்கோங்க...' 'இந்த டீம்' தான் கப் அடிக்க போகுது...! - ஆருடம் கணித்த முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் 14-வது தொடர் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. இறுதிப் போட்டி வரும் இன்று (15-10-2021) நடைபெறவுள்ள நிலையில் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிக்கொள்ள உள்ளது.
நடப்பு ஆண்டு கிரிக்கெட் தொடரின் முதல் பாதியில் கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடினாலும், துபாயில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தங்களின் முழு திறமையை வெளிக்காட்டி இறுதி போட்டிக்கு வரை வந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
எப்போதும் போல் நம்முடைய கேப்டன் கூல் தல தோனி டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. சாம்பியன் கோப்பையை கொல்கத்தா அணி இதுவரை 2 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர் என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில், இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் வெல்லும் என முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.
அதில், 'இந்த ஆண்டு போட்டியின் முதல் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பைனல்ஸ் வரை வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியிலும் கொல்கத்தா அணி தோல்வியின் விளிம்பு வரை வந்துவிட்டது. அந்த அணியில் இருக்கும் சீனியர் வீரர்களான இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும்'எனக் கூறியிருந்தார்.
'அதோடு இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான பாதையில் சென்று வருகிறது. அந்த அணி எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அமைதியாக உள்ளது.
சி.எஸ்.கே கேப்டன் தோனியும் தன்னுடைய பழைய ஆட்டத்திற்கு திரும்பிவிட்டார், கேப்டன்சியிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சி.எஸ்.கே அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கொல்கத்தா அணி அவர்களை விட அனைத்து வகையிலும் அசுரபலம் கொண்ட ஒரு அணியை தான் இறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளதாக நான் நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.