இந்த வருஷத்தின் சிறந்த ஆராய்ச்சியாளர்.. கொரோனா பத்தி இந்த உலகமே தெரிஞ்சுக்க இவங்கதான் காரணம்.. பரிசு தொகையை கேட்டாலே தலை சுத்துதே..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் விதத்தில் இணைய தளத்தை உருவாக்கிய பெண் ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read | மணிக்கு 240 கிமீ வேகத்துல வீசிய புயல்.. சாலையில் சிக்கிய செய்தியாளர்.. போராடி மீண்ட திக் திக் வீடியோ..!
கொரோனா
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. இன்றைய தினத்தில் உலக அளவில் கொரோனா குறித்த தகவல்களை நாம் இணையதளங்கள் மூலமாக எளிதில் தெரிந்துகொள்கிறோம். அந்த வகையில் கொரோனா பரவிய நேரத்தில் உலக அளவில் அதன் தாக்கம், பரவல் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இணையதளம் ஒன்றை உருவாக்கினார் லாரன் கார்ட்னர் எனும் ஆராய்ச்சியாளர்.
விருது
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் இணை பேராசிரியராக இருக்கிறார். இந்நிலையில், உலகெங்கிலும் கொரோனா பரவல் குறித்து அறிந்துக்கொள்ளும் வகையில் இவர் உருவாக்கிய தளம் நம்பிக்கை வாய்ந்தது எனவும், இதனால் சர்வதேச பொது சுகாதார அமைப்பில் புதிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஆல்பர்ட் மற்றும் மேரி லாஸ்கர் அறக்கட்டளை (Albert and Mary Lasker Foundation). இந்த அறக்கட்டளை தான் தற்போது கார்ட்னருக்கு விருதை அறிவித்திருக்கிறது. இதற்காக 2,50,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
பிற பரிசுகள்
அதேபோல மருத்துவ ஆராய்ச்சிக்கான பரிசு, ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியலாளர் யுக் மிங் டென்னிஸ் லோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ரிச்சர்ட் ஓ.ஹைன்ஸ், கலிபோர்னியாவின் சான்ஃபோர்ட் பர்ன்ஹாம் ப்ரீபிஸ் மெடிக்கல் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த எர்க்கி ரூஸ்லஹ்தி மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் திமோதி ஏ. ஸ்பிரிங்கர் ஆகிய மூன்று பேருக்கும் அடிப்படை ஆராய்ச்சிக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
