VIDEO: "அந்த பொண்ணு சொல்றது எல்லாமே பொய்...' 'நடந்த உண்மை இது தான்"... - ZOMATO டெலிவரி பாய் காமராஜ் கண்ணீர்...! - EXCLUSIVE வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் சொமேட்டோ ஊழியர் தாக்கியதாக கூறப்பட்ட வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட மற்றும் பகிரப்பட்ட வீடியோவாக இருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து சொமேட்டோ ஊழியர் வெளியிட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஹிட்டேஷா சந்திரனே. இவர் அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மார்ச் 9-ம் தேதி சொமாட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு வருவதற்குத் தாமதமாவதால் உணவிற்கு பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார்.
அப்போது உணவு டெலிவரி செய்ய காமராஜ் என்பவர் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது காமராஜுக்கும், ஹிட்டேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கஸ்டமர் கேரிடம் பேசியதில் ஆர்டரை ரத்து செய்துகொள்வதாக கூறியுள்ளனர் சொமாட்டோ கஸ்டமர் கேர்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஹிட்டேஷாவின் வீட்டிற்குள் அவர் நுழைய முயன்றதாகக் கூறியுள்ள ஹிட்டேஷா, ''என்னுடைய பாதுகாப்பிற்காகச் செருப்பைக் கையில் எடுத்ததாக'' கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் சொமாட்டா டெலிவரி பாய், எனது மூக்கை உடைத்ததாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஹிட்டேஷா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நான் உணவு டெலிவரி பண்ண போனேன். அப்போ அவங்ககிட்ட, மேடம் கொஞ்சம் டிராபிக் ஆயிடுச்சு, அப்புறம் ரோடு வேற சரியில்ல, அதனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று சொன்னேன்.
ஆனால் அவங்க 'உணவை ஃபிரீயா கொடு' என்று சொன்னாங்க, 'அந்த மாதிரி பண்ண முடியாது மேடம்' என நான் சொன்னேன். அப்போ 'கஸ்டமர் கேர் சாட்லையும் ஃப்ரீயா கொடுக்கமுடியாது உணவை கேன்சல் பண்ணிக்கோங்க சொல்லிட்டாங்க'.
Zomato India - PLEASE find and publicly report the truth.. If the gentleman is innocent (and I believe he is), PLEASE help us penalise the woman in question. This is inhuman, shameful and heartbreaking .. Please let me know how I can help.. #ZomatoDeliveryGuy @zomatoin
— Parineeti Chopra (@ParineetiChopra) March 13, 2021
உணவை திருப்பி கொடுக்க சொல்லி கேட்டேன். ஆனால் தரவில்லை. அப்போது அவங்க உணவை கதவு கிட்ட வைத்தால்நான் எடுத்துட்டேன். ஆனால் அவங்க பின்னாடி வந்து என்ன செருப்பால் அடிச்சாங்க. நான் அதை தடுக்க முயற்சி செய்தேன். ஆனா அவங்க அடிச்சிட்டு இருந்தபோது, கையில் இருந்த மோதிரம் அவங்களோட மூமூக்கில் பட்டு அடிபட்டது.
இதுதான் நடந்த உண்மை. எனக்கு வயதான அம்மா இருக்காங்க, அப்பா கிடையாது. கடந்த 2 வருஷம் மேளாக சொமேட்டோ வேலை செய்து வருகிறேன், ஆனால் இந்த மாதிரி கஸ்டமரை நான் பார்த்தது கிடையாது. நான் எந்த தப்பும் பண்ணவில்லை. எனக்கு நீங்கள் தான் சப்போர்ட் பண்ணனும். எனக்கு உங்களோட சப்போர்ட் தேவை' என்ன மனம் நொந்து கூறியுள்ளார் டெலிவரி பாய் காமராஜ்.
இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் தன்னுடைய கருத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.