'பெண்' ஊழியர்களுக்கு... வருஷத்துல '10' நாள் "மாதவிடாய் கால விடுப்பு"... 'பிரபல' உணவு 'டெலிவரி' நிறுவனத்தின் அசத்தல் 'அறிவிப்பு'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனமான ஜோமேட்டோ (Zomato) நிறுவனம், தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுகளுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பணிபுரியும் இடத்தில் பணிக் கலாச்சாரம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விடுப்பு முறையை ஜோமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல, பெண்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சில பள்ளிக்கூடங்கள் பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜோமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், தனது பிளாகில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'எங்கள் நிறுவனத்தில் நம்பிக்கை, உண்மை, போன்ற கலாச்சாரத்தை வளர்க்க விரும்புகிறோம். அதன்படி இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் மாதவிடாய் கால விடுப்புக்கு பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதே போல, நமது பெண் ஊழியர்கள் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கும் போது சங்கடமான நிலையை ஏற்படுத்தும் வகையில் ஆண் ஊழியர்கள் நடந்து கொள்ள கூடாது' என அவர் தெரிவித்துள்ளார்.