VIDEO: 'எல்லா பக்கமும் தொல்ல பண்றாங்க!'.. விடிய விடிய துப்பாக்கிச்சூடு... 3 பேர் பலி!.. ராணுவத்தை உக்கிரமாக்கிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதில் தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை இன்றும் நீடித்தது. இன்று காலையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பின்னர், பிற்பகல் 2 பேரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தத்துடன், புகை வெளியானது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
Video courtesy: Hindustan Times

மற்ற செய்திகள்
