ஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஜொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கியது. இந்த இரு நிறுவனங்களின் வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் மதுபானங்களை டெலிவரி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணிகளை அமேசான் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபானங்களை விநியோகம் செய்வதற்கான அனுமதியை பெற்றதை அடுத்து, அமேசான் நிறுவனம் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.