இத எல்லாமா போய் 'ஃபுட்' டெலிவரி 'ஆப்'ல தேடுவீங்க??... 'ZOMATO' நிறுவனமே வெளியிட்ட 'தகவல்'!!... "எல்லாத்துக்கும் காரணம் இந்த 'கொரோனா' தான்"!!
முகப்பு > செய்திகள் > இந்தியா2020 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
அனைத்து தொழில்களும் முடங்கிப் போன நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான சோமாட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) ஆகியவையும் சற்று பாதிப்புக்குள் ஆகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்ய அரசு அனுமதியளித்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் உணவுகளை நிறுவனம் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில், இந்தியாவில் என்னென்ன உணவு பொருட்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்து சோமாட்டோ நிறுவனம் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை இட்டுள்ளது. டெல்லி, பெங்களூர் மற்றும் புனே ஆகிய பகுதிகளில் மோமோஸ் உணவு வகை அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பொருளாக பிரியாணி அமைந்துள்ளது.
மேலும், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு வருடத்தில் 1,380 முறை சோமாட்டோ மூலம் உணவு பொருள் ஆர்டர் செய்துள்ளார்(சராசரியாக ஒரு நாளைக்கு 4 தடவை). இது அனைத்தையும் விட சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சோமாட்டடோ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 414 பேர், வெளவால் சூப் (Bat Soup) உள்ளதா என சோமாட்டோ மூலம் தேடியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ், வெளவால்களில் இருந்து பரவியிருக்கலாம் என ஒரு யூகம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான் வேடிக்கையாக மக்கள் அப்படி தேடியிருக்கலாம் என தெரிகிறது. மொத்தமாக, இந்தாண்டு முழுவதும் இந்தியாவில் சோமாட்டோ மூலம் நிகழ்ந்த டெலிவரி குறித்து மீம்ஸ்கள் மூலமே தகவலை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.