'60 மேட்ச்கள்.. 'அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் உணர்வுடன்'.. லைவ் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பெற்றுள்ள பிரபல OTT சேனல் இதுதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிக ரசிகர்கள் பின்தொடரும் மற்றும் ஏராளமான பார்வையாளர்களைக் கொண்ட, YuppTV இந்த லாக்டவுனிலும் 10க்கும் மேற்பட்ட மொழி பிராந்தியங்களில் ட்ரீம் 11 IPL 2020 போட்டிகளை LIVE ஆக ஒளிபரப்பும் உரிமைகளை பெற்றுள்ளது.

செப்டம்பர் 19 முதல் துவங்கி நவம்பர் 10, 2020 வரை இந்த OTT தளம், ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியை, ஒளிபரப்பவுள்ளது. மற்ற கிரிக்கெட் போட்டிகளைப் போலல்லாமல், வெறும் 3 மணிநேரம் மட்டுமே ஒரு போட்டி நடைபெறுமாறு உள்ள ஐபிஎல் டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில் YuppTV தரப்பில் இருந்து இம்முறை, ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங்கை ஆஸ்திரேலியா, கான்டினென்டல் ஐரோப்பா, மலேசியா, தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் தவிர), இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள், மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி தெற்காசியாவின் 14 மொழிகளில் 250க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 3000+ திரைப்படங்கள் மற்றும் 100+ டிவி ஷோக்களை வழங்கி வரும் Yupp TV, ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியின் ஸ்ட்ரீமிங் உரிமைகளுடன் இந்த ஆண்டு கூடுதல் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் பார்வையாளர்களுக்கு ஐபிஎல் போட்டியை நேரடியாக பார்க்கும் விர்ச்சுவல் அனுபவத்தை , அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் அதே உணர்வும் தன்மையும் மாறாமல் வழங்கவும் YuppTV நிறுவனம் முனைப்பு காட்டுவதாக அதன் நிறுவனர் உதய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
