பெண் போலீஸ் தற்கொலையில் மர்மம்.. காதலித்த ஆண் காவலர் எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 18, 2019 01:59 PM

திருச்சியைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, தங்களது காதல் விசயத்தில் எடுத்துள்ள விபரீதமான முடிவால் திருச்சி காவல்துறை அதிர்ந்து போயுள்ளது.

TN Police man attempts suicide, after his girlfriend dead by suicide

கரூரின், குளித்தலை அருகே உள்ளது திம்மாச்சிபுரம். இங்கு வசித்துவரும் குமார் என்பவரது 4 மகளில் ஒருவர்தான் ராஜலட்சுமி. தமிழக காவல்துறையில் கடந்த 2014-ஆம் ஆண்டு பணியில் இணைந்த ராஜலட்சுமி திருச்சி டோல்கேட் அருகில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் தங்கியபடி ஆயுதப் படைப்பிரிவில் வேலைசெய்து வருகிறார்.

இந்த சூழலில், ராஜலட்சுமியின் பேட்சில் தேர்வாகி, காவலர் பணியில் பணியாற்றி வருபவர் சிவகுமார். குளித்தலை அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த இவர்,  சிறப்புக் காவல் படை முதல் அணியில் பணியாற்றி வருபவர். இவருக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே நட்பாகி, நட்பு காதலாகி செல்போன் பேச்சு, நேரடி சந்திப்புகள் என போய்க் கொண்டிருந்துள்ளது. இப்படியிருக்க, நேற்று முன்தினம், திருவெறும்பூர் பகுதிக்கு பணிக்குச் சென்ற ராஜலட்சுமி, பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது சிவகுமாரும், அவரது குடும்பத்தாரும் ராஜலட்சுமிக்கு போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ராஜலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அறிந்த சிவகுமார் தன் காதலி இல்லாத உலகில் தானும் வாழப்போவதில்லை எனக் கூறி, தானாகவேச் சென்று சாலை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதால், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே ராஜலட்சுமியின் தாயார், சிவகுமார் தன் மகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதால்தான், தன் மகள் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார். ஆனால் விசாரித்ததில் இருவீட்டார் தரப்பிலும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால், இத்தகைய முடிவை ராஜலட்சுமி எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இந்த புகார் குறித்தும், ராஜலட்சுமியின் தற்கொலை குறித்தும், சிவகுமாரின் விபத்து குறித்தும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ராஜலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்திருக்கின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #TNPOLICE