LAPTOP-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த IT இளம்பெண்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. WORK FROM HOME-ல் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 20, 2022 12:47 PM

வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young techie suffers serious burns in laptop blast in AP

Also Read | IPL மேட்சை இலவசமாக பார்க்க App.. சிக்கிய சிவகங்கை இளைஞர்.. அதிர வைத்த சம்பவம்..!

ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா (வயது 22). இவர் பெங்களூரில் உள்ள IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே Work from home முறையில் சுமலதா வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மடிக்கணினி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சுமலதா அலறியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் தீக்காயத்துடன் இருந்த அவரை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மடிக்கணினியின் சார்ஜர் வெடித்து தீப்பிடித்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகளாக IT ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில், IT பெண் ஊழியரின் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | Dating App-ல் கேரள பெண்ணுக்கு காதல் வலை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியா இளைஞர்.. அடுத்து வெளியவந்த அதிர்ச்சி தகவல்..!

Tags : #YOUNG #LAPTOP BLAST #SOFTWARE ENGINEER #ROOM #WORK FROM HOME #IT #இளம்பெண் #ஆந்திரா மாநிலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young techie suffers serious burns in laptop blast in AP | India News.