'2022 டிசம்பர்' வரைக்கும் 'ஆபீஸுக்கு' வர சொல்லாதீங்கப்பா...! நிம்மதியா வீட்ல இருந்து 'வொர்க்' பண்ணட்டும்...! - ஐடி நிறுவனங்களுக்கு கடிதம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியது முதல் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது. இந்நிலையில் வொர்க் பிரம் ஹோம் நடைமுறையை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க வேண்டும் என கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி பெங்களூருவில் நேற்று (24-08-2021) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
![IT employees allowed work from home until December 2022 IT employees allowed work from home until December 2022](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/business/it-employees-allowed-work-from-home-until-december-2022.jpg)
அதில், 'கொரோனா வைரஸ் தொற்றினால் கர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணிபுரிய அனுமதித்திருந்தது.
ஆனால், இப்போது கொரோனா தொற்று கொஞ்சம் குறைந்துள்ள காரணத்தால் நிறுவனங்களுக்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்து நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 60% நிறுவனங்கள் 50%க்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இயங்குகின்றன.
இப்போது பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், 19 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் ஊழியர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
எனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.
இதனால், வொர்க் பிரம் ஹோமில் பணியாற்றுகின்றவர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு வீட்டில் பணியாற்றும் சூழல் கர்நாடக மாநிலத்தில் உருவாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)