"3 மாசமா ஆளையே காணோம்".. வீட்டுலயே சல்லடை போட்ட போது பிளாஸ்டிக் பேக்கில் இருந்த விஷயம்.. அதிர்ந்த மொத்த ஏரியா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையின் லால்பாக் பகுதியை சேர்ந்தவர் வீணா ஜெயின். சுமார் 50 வயதை தாண்டிய பெண்ணான இவர், கடந்த சில மாதங்களாக திடீரென காணாமல் போக அவரது சகோதரர் மற்றும் மருமகன் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இறுதியில் வீணாவை அவர்கள் பார்த்ததாகவும், அதன்பின் எங்கேயும் பார்க்கவில்லை என்றும் அவர்கள் போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சூழலில், வீணா ஜெயினின் மகளான ரிம்பிள் இருந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தான் கடும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதன்படி, அந்த வீட்டிற்குள் பிளாஸ்டிக் பைக்குள் பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர் அது மட்டுமல்லாமல் எலும்பு மற்றும் சதை உள்ளிட்ட பகுதிகள், இரும்பு பெட்டியில் கழிவறை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண்ணின் உடல் பாகங்கள் காணாமல் போன பெண்ணின் மகள் வீட்டிலேயே கிடைத்த சூழலில் மற்றொரு திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது.
அதன்படி, வீணாவை அவரது மகளான ரிம்பிள் கொலை செய்துள்ளார் என்றும் தெரிய வர அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் வீணா ஜெயின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்ததாக சொல்லப்படும் நிலையில் அக்கம் பக்கத்தினரும் அதன் பின் அவரை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதே போல, தனது தாயார் உடலை 3 மாத காலமாக ரிம்பிள் ஜெயின் வீட்டில் வைத்திருந்த போதும் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகமும் ஏற்படவில்லை. அப்பகுதியில் சில கட்டுமான பணிகள் நடந்து வந்ததன் காரணமாக அதில் எலி உள்ளிட்டவற்றை இறந்து கிடந்து அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தவறாக கருதி உள்ளனர். இதன் காரணமாக, இந்த விவகாரத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.
தாயான வீணாவை ரிம்பிள் ஜெயின் எதற்கு கொலை செய்தார் என்பது சரிவர தெரியாத நிலையில், அடிக்கடி மகளும், தாயும் சண்டை போட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பான உறுதியான காரணங்களும் வெளியாகாத நிலையில், தாயை கொலை செய்தது குறித்து அவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
தாயை கொலை செய்து அவரது உடலை வீட்டின் பல்வேறு பகுதியில் மகள் மறைத்து வைத்திருந்த சம்பவம், அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
