'சுதந்திர' தினத்த கொண்டாட... காரில் கிளம்பிய 'இளைஞர்கள்'!!... திரும்பி வர்ற 'வழி'ல... 'மலையுச்சி'யில் வைத்து எதிர்பாராமல் நடந்த 'கோரம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்து ஒன்று, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி என்னும் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கடந்த சனிக்கிழமையன்று 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதனைக் கொண்டாட வேண்டி, அங்கிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலுள்ள குர்சியோங் என்னும் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த வழியில், கார்கில் தாரா என்னும் பகுதியை அடுத்த ரோகிணி ரோடு என்னும் மலைப்பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் அங்கிருந்து சுமார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் உடலை ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் உடல்களை இன்று காலை மீட்டனர். நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. ஐந்தாவது நபரான ராஜ் சிங் என்பவரது உடல் மட்டும் இன்று மதியம் வரை மீட்கப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காரில் இருந்த இளைஞர்கள் தங்களது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் பேசியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.