திமுக தலைவருக்கு 'எனது' வாழ்த்துக்கள்...! ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த 'பாஜக' மத்திய அமைச்சர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 02, 2021 05:07 PM

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் திமுக ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

Union Minister Rajnath Singh congratulated Stalin

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவு இன்று காலை தொடங்கியது. தற்போதைய நிலவரம் படி திமுக முன்னிலையில் உள்ளது.

234 தொகுதிகளில் 153 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், 80 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், 1 தொகுதியில் மக்கள் நீதி மன்ற கட்சியும் உள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது பாதி முடிந்துள்ள நிலையில், அதிமுகவோடு கூட்டணியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரும், மத்திய பாதுகாப்பு தலைவருமான ராஜ்நாத் சிங் திமுக தலைவர் முதல்வர் வேட்பாளர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் திமுக தலைவரான திரு@mkstalin அவர்களுக்கு வாழ்த்துக்கள்' எனக் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Union Minister Rajnath Singh congratulated Stalin | India News.