இதுக்கு மேல 'இங்க' இருந்தா சரி வராது...! உடனே, 'ஜெட்' ப்ளேன்ல டிக்கெட் போட்ருவோம்...! 'பறந்து போய் எஸ்கேப்...' - ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் பணக்கார மக்கள் வெளிநாட்டுக்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் மக்களையும், அரசையும் ஆட்டம் காண வைக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை பாதித்து இறப்பு வீதத்தை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனைகளில் இடமின்மை செய்திகளும் மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டு செய்திகளும், மக்களின் இந்த அவல நிலையின் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனால் இந்தியாவில் வாழும் பணக்கார குடும்பங்கள் சில வெளிநாடுகளுக்கு தனி விமானத்தில் பயணித்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜன் மெஹ்ரா கூறும்போது, 'பணக்காரர்கள் என்று இல்லை, யாருக்கெல்லாம் தனியார் ஜெட் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் தனியார் ஜெட்களில் பறக்கின்றனர்' என்று கூறினர்.

மற்ற செய்திகள்
