இந்த இக்கட்டான சமயத்துல ‘மதுக்கடைகளை’ திறக்க இதுதான் காரணம்..! மத்திய இணை அமைச்சர் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 07, 2020 05:36 PM

மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

CMs requested PM to reopen liquor shops, says MoS Home Kishan Reddy

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது  சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் ஆதரவும், பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மதுக்கடைகள் திறப்பது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ‘வீடியோ கான்ஃபிரன்ஸில், ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட நிதி இல்லை எனவும், அதனை போக்க மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால்தான் மத்திய அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது’ என அவர் தெரிவித்துள்ளார்.