ஒரு 'மாம்பழத்தை' பறிச்சு 'சாப்பிட்டா' ஒரு டேஸ்ட்...! 'இன்னொண்ண சாப்பிட்டு பார்த்தா அது வேற டேஸ்ட்...' ஒரே மரத்துல இத்தனை வகையா...? - அதிசய மாமரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 01, 2021 09:36 PM

உத்தரப் பிரதேசத மாநிலத்தில் ஒரே மாமரத்தில் மட்டும் 121 மாம்பழங்கள் விளைந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Uttar Pradesh, 121 mangoes produced from a single mango tree

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்திலிருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. அதில் இன்னமும் சில மரங்கள் காய் கனிகளை கொடுத்து வருகின்றன. அப்படி ஒரு மரம் தான் உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் உள்ள சஹரான்பூரில், இருதயப் பகுதியிலுள்ள கம்பெனி தோட்டம் எனும் இடத்தில் பல அதிசய மாமரங்கள் உள்ளன. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்தத் தோட்டத்தில் தற்போது வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தத் தோட்டத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது. அதன் காரணமாக அங்கு இருக்கும் ஒரு மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் கிடைத்துள்ளன.

தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சஹரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் இந்த ஒற்றை மரத்தில் வளர்ந்து வருகிறது.

இந்த அதிசய மரத்தை காண சஹரான்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uttar Pradesh, 121 mangoes produced from a single mango tree | India News.