'இதெல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்' ... 2, 3 - ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ... ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனை மேம்படுத்த வேண்டி வங்கிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிகளில் 2 மற்றும் 3 - ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கி குறித்த திறன் வளர்ச்சிக்காக பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக லக்னோவை சுற்றியுள்ள பகுதிகளின் பள்ளிகளில் அதிகமாக பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதம் கல்வி அறக்கட்டளை என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த பயிற்சிக்கென பிரத்யேகமாக ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 ரூபாய் வரை கையாள்வது, வங்கி பணப் பரிமாற்றம் மேற்கொள்வது, எப்படி வாடிக்கையாளர்களைக் கையாள்வது, வங்கி கணக்குகளை உருவாக்குவது என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து பிரதம் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நுஸாத் மாலிக் கூறுகையில், 'வாழ்க்கைக்கு தேவையான திறன்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்களிடையே விவாத திறன்கள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட கற்றல் ஆகியவை வளரும்' என தெரிவித்தார்.