“2 வருடமாக.. கோயில் வாசலில்.. பிச்சை எடுத்த கோடீஸ்வரர்!”.. சாமி கும்பிட வந்தவரால், நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jan 13, 2020 10:02 PM
திரைப்படங்களில் வருவது போல, கோடீஸ்வரரின் மகன் ஒருவர் 2 வருடங்களாக பிச்சை எடுத்து வந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அஸாம்கர் அருகே உள்ள அம்பலா பகுதியில் உள்ள அனஜ்மண்டி கோவிலுக்கு வெளியில் தங்கி 2 வருடங்களாக பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து வந்துள்ளார் தனஞ்செய் தாகூர். இந்த நிலையில்,கோயிலுக்கு வந்த பக்தர் சாஹில் என்பவர், தாகூருக்கு அடிபட்டு காலில் ரத்தம் வந்திருந்ததை கண்டதும், அவருக்கு முதலுதவி செய்து விசாரித்ததில், தாகூர் போதை மருந்துக்கு அடிமையானவர் என்று அறிந்ததோடு, அவரின் குடும்பத்தை பற்றியும் அறிந்துள்ளார்.
அதன் பின்னர் தாகூரின் நினைவில் இருந்த அவரது சகோதரியின் நம்பருக்கு போன் செய்து, 2 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தாரிடம் இருந்து தொலைந்து போன தாகூர் பற்றி சாஹில் தெரியப்படுத்தினார். உடனே தாகூரின் சகோதரி நேஹா அங்கு வந்து தனது சகோதரர் தாகூரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியினரை நெகிழ வைத்துள்ளது.
குறிப்பு: சித்தரிப்புப் படம்
