‘அவர் தான் என்னோட சாமி...’ ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவருக்காக விரதம் இருக்கேன் ...’ 6 அடிக்கு சிலை வைத்து வழிபடும் டிரம்ப் கிருஷ்ணா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 19, 2020 11:04 AM

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் பூஜை, புனஸ்காரம் செய்து வழிபடுகிறார்.

US President trump worship the God of Indian Youth

தெலுங்கானா மாநிலம் கோன்னே பகுதியை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா. டிரம்ப்பின் தீவிர பக்தரான இவர், தனது வீட்டில் டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில், இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன். எந்த வேலையை துவங்குவதற்கு முன்பும் அவரது படத்தை வைத்து வழிபட்ட பிறகு துவங்குவது எனது வழக்கம்.

அவரை சந்திக்க விரும்புகிறேன். எனது கனவை நிஜமாக்கித் தர வேண்டும் என இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். டிரம்ப் எனக்கு கடவுள் போன்றவர். அதனால் தான் அவருக்கு சிலை அமைத்துள்ளேன். இந்த சிலை அமைக்க கிட்டதட்ட ஒரு மாதம் ஆனது.

இது பற்றி கிருஷ்ணாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், அவரது உண்மையான பெயர் புஷா கிருஷ்ணா. ஆனால் அவர் டிரம்ப்பிற்கு மீது கொண்ட தீவிர பக்தி மற்றும் அவரை வழிபட துவங்கியது முதல் கிராமத்தினர் அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்றே அழைக்கின்றனர். அவரது வீட்டையும் டிரம்ப் வீடு என்று அழைக்கிறார்கள். கிருஷ்ணாவின் ஆசையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பொது மக்களும் ஆசை தெரிவித்துள்ளனர்.

Tags : #TRUMP