'ட்ரம்ப்' என்னை முத்தமிட அழைத்தார்... அம்பலப்படுத்திய பெண் 'நிருபர்'... பாலியல் புகாரால் 'அதிர்ந்த அமெரிக்கா'...
முகப்பு > செய்திகள் > உலகம்By Suriyaraj | Jan 06, 2020 06:17 PM
டிரம்ப் என்னை முத்தமிட அழைத்தார் என பெண் நிருபர் கூறியுள்ள புகாரால் அமெரிக்கா அதிர்ந்து போய் உள்ளது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘பாக்ஸ் நியூஸ்’ டி.வி. சேனலில் நிருபராக இருந்த கர்ட்னி பிரையல் என்பவர்தான் இந்த பாலியல் புகாரை கூறி இருக்கிறார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கே.டி.எல்.ஏ. வானொலியில் பணியாற்றி வரும் இவர், தனது ஊடக அனுபவங்களை அடிப்படையாக வைத்து ‘டுநைட் அட் 10: கிக்கிங் பூஸ்அன்ட் பிரேக்கிங் நியூஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார். இந்த வாரம், அந்தப் புத்தகம் வெளியாக உள்ளது.
அதில், ட்ரம்பின் அத்துமீறல் குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பாக ட்ரம்ப் நடத்திய அழகிப் போட்டியில் தான் நடுவராக பணியாற்ற விரும்பியதாகவும், அதுகுறித்து தொலைபேசியில் பேசிய போது, ட்ரம்ப் தன்னை முத்தமிட அழைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன, தாம், "நாம் இருவருமே திருமணம் ஆனவர்கள்" என்று கூறி தொலைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் ட்ரம்ப் மீது பாலியல் புகார்கள் கூறிய பெண்களை பொய்யர்கள் என்று அவர் கூறியது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், புகார் கூறிய பெண்ளை தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை. இருப்பினும் இவரது புகார், அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.