'டிஸ்பிளே' சரியா ஒர்க் ஆகாததால் வந்த வினை,,.. 'காசு' குடுக்கலன்னா உன் மானம் போய்டும்ன்னு 'டார்ச்சர்' பன்றான் சார்,,.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த 'விபரீதம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த கர்வே நகர் பகுதியிலுள்ள 27 வயது இளம்பெண் ஒருவர், தனது சமூக வலைத்தள நண்பர் மீது அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், அவர் சமூக வலைத்தளம் மூலமாக இளைஞர் ஒருவருடன் நட்பாகியுள்ளார். அந்த இளைஞரும், புனேயை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இருவரும் அதிகம் பழகி வந்ததை தொடர்ந்து, தங்களது செல்போன் எண்களையும் பரிமாறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் செல்போனில் டிஸ்பிளே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் 'டச்' சரியாக வேலை செய்யாத நிலையில், அந்த இளம்பெண்ணின் சிலர் பிரைவேட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறுதலாக அந்த இளைஞருக்கு சென்றுள்ளது. இதனை வைத்துக் கொண்டு அந்த இளைஞர், இளம்பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். 40 ஆயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே புகைப்படங்களை நீக்குவேன் என்றும், இல்லையென்றால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும், அந்த இளம்பெண் அந்த இளைஞரை இதுவரை சந்தித்தது இல்லை எனவும், அவரது உண்மையான பெயர் கூட தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
