"மாப்பிள்ளை செஞ்சது சுத்தமா புடிக்கல.." திருமண மேடையில் மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு.. இது எல்லாம் ஒரு குத்தமா மா??
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேசம் : திருமண மேடையில் மணமகன் செய்த காரியத்தில் விருப்பம் இல்லாததால், மணமகள் எடுத்த முடிவு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
பொதுவாக திருமண நிகழ்ச்சி என்று வந்தால், அதில் ஏகப்பட்ட திருமண சடங்குகளும், சம்பிரதாயங்களும் இடம்பெற்றிருக்கும்.
அதிலும் குறிப்பாக, வட இந்தியாவில் திருமண சடங்குகள் அதிகம் நடைபெறும். மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல சடங்குகள் பிரம்மாண்டமாக, குடும்பத்தினர் சூழ நடைபெறும்.
மாலை மாற்றும் நிகழ்ச்சி
இந்நிலையில், அப்படி ஒரு சடங்கு நிகழ்ச்சி நடந்த போது தான், பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் ஆரையா என்னும் மாவட்டத்தில், இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அப்படி, திருமணம் செய்ய இருந்த மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு முன், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சற்று வேடிக்கையை கூட்டுவதற்காக, மாலையை கழுத்தில் வாங்கிக் கொள்ளாத படி, மணமக்கள் அடம் பிடிப்பார்கள்.
ஏற்காத மணப்பெண்
இப்படி மருமக்கள் மறுத்து வேடிக்கை செய்வதை, சுற்றி நிற்கும் குடும்பத்தினர் கூட ரசித்துப் பார்ப்பார்கள். ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில், நேர்மாறான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலை மாற்றும் சடங்கின் போது, மணமகன் மாலையை தனது கழுத்தில் தூக்கி எறிந்ததாக, கோபப்பட்ட மணப்பெண், தன்னுடைய திருமணத்தை நிறுத்தியுள்ளார். நான் மாலையை எறியவில்லை என மணமகன் தெரிவித்த போதும், அதனை மணப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.
வாக்குவாதம்
இதன் பெயரில், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மணமகளிடம் சமாதானம் பேசி, திருமணத்திற்கு சம்மதம் சொல்ல மணமகனின் வீட்டார், முயற்சி செய்துள்ளனர். ஆனால், அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பெண்ணிற்கு வேறு ஏதேனும் பிரச்சனை என்பதற்காக தான், அவர் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்றும், மணமகனின் வீட்டார் குற்றஞ்சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பலன் கிடைக்கவில்லை
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவர்கள் சமாதானம் பேச முயற்சி செய்தும் பலன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இறுதியில், திருமணத்தை நிறுத்த மணமக்களின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பரபரப்பு
மணமகன் மாலையை தூக்கி வீசியதன் பெயரில், திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தது. நடனம் ஆடியதாக, மனப்பெண்ணை மணமகன் அறைந்தார். இதனால், கோபத்தில் அந்த திருமணத்தை, மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் நிறுத்தினர். இறுதியில் தன்னுடைய முறைப் பையனை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நின்று போனதற்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டது.
இப்படி சமீப காலமாக, திருமண மேடை வரை சென்று நின்று போன திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.