துருக்கி: பூகம்பத்திற்கு முன்னாடி இயற்கை கொடுத்த அலாரம்?.. ஆக்ரோஷமான பறவைகள்.. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.
ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளன. இந்நிலையில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பறவைகள் இரவில் வட்டமிட்டு பறப்பதுடன், கூட்டமாக அங்கிருந்த மரங்களில் தஞ்சமடைகின்றன. மரங்களில் கூட்டமாக அமர்ந்து தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்திருக்கின்றன. இதனை உள்ளூர் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இயற்கையின் எச்சரிக்கை அமைப்பு. அதைக் கேட்கும் அளவுக்கு நாம் இயற்கையோடு இணங்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | செல்ல நாய்க்கு ஏற்பட்ட பாதிப்பு.. மருத்துவ செலவுக்காக வீட்டையே விற்க முடிவெடுத்த நபர்.. என்ன மனுஷன்யா..!