”அதுக்கெல்லாம் குட் பை!”.. “டிடிஎச்-லயே 200 சேனல்ஸ்!”.. “அதுவும் இவ்ளோ குறைந்த விலையிலா?”.. ட்ராய் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 06, 2020 01:46 PM

தற்போது வாடிக்கையாளர்கள் பார்க்கும் ஒவ்வொரு சேனலுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதொரு திட்டம் ஒன்றை ட்ராய் கழகம் அறிவித்துள்ளது.

trai new rules for cable tv price list and DTH from march

டிடிஹெச் மற்றும் கேபிள் டிவிக்களில் வரும் சேனல்களுக்கான ரீசார்ஜ் விலையை, அவர்களே நிர்ணயித்து வந்த நிலையில், ஸ்போர்ட்ஸ், மூவிஸ், கிட்ஸ் என ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தனியாக பிரத்யேக பேக்குகளை டிடிஎச் சேவை நிறுவனங்கள் வழங்கி வந்தன.

இந்நிலையில்தான், 130 ரூபாய் பெறும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவிக்கள் 200 சேனல்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும், இதனைத் தவிர்த்து ஒவ்வொரு சேனலுக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை, இந்த மாத இறுதிக்குள் அந்தந்த சேனல்களே முறையாக அறிவிக்க வேண்டும் என்றும் ட்ராய் கழகம் அறிவித்தது.

வரும் மார் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ட்ராய் கழகத்தின் இந்த புதிய திட்டத்தின்படி, வரிகள் உட்பட 130 ரூபாய்க்கு 200 சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மை காலமாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேனல்களுக்கு 130 ரூபாய் மட்டுமல்லாமல் கூடுதலாகவே பணம் செலுத்தி வரும் நிலையில், ட்ராய் கழகத்தின் இந்த புதிய திட்டத்தின் கீழ், அதிக சேனல்கள் வரும் என்பதோடு,  ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் மட்டுமே கட்டணமாய் விதிக்கப்படும் என்பதும், இதில் தூர்தர்ஷன் சேனல் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #DTH #TRAI