'பர்ஸ்ட் நாள் பார்லிமெண்ட்'.. வைரலாகும் திரிணாமூல் கட்சி எம்.பிக்கள் பதிவிட்ட ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 28, 2019 05:07 PM

முதல் நாள் இன்று என்கிற தொனியில், பார்லிமெண்ட் முன்னாள் நின்று திரிணாமூல் எம்.பிக்களும் மேற்குவங்க நடிகைகளுமான மிமி சக்ராபார்த்தியும், நுஸ்ரத் ஜஹானும் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trinamool MPs Mimi Chakraborty, Nusrat Jahan posing parliament

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்கத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் தற்போது நடந்து முடிந்த 17வது மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தேர்வான இரு எம்.பிக்கள்தான் மேற்கு வங்க நடிகைகளான மிமி சக்ராபார்த்தியும், நுஸ்ரத் ஜஹானும்.

ஆனால் தென்னிந்தியாவில் கர்நாடகாவைத்தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு ஓரளவு வரவேற்பும் இல்லாத சூழலில், வட இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக பெரும்பாலான தொகுதிகளை வென்றது. அந்த மோடி அலைக்கு நடுவே, நீந்தி ஜெயிப்பதற்கு சாதாரண வேட்பாளர்களுக்கு சற்று கடினம்தான்.

ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜதாவ்பூரில் மிமி சக்ராபார்த்தியும், பஷீர்ஹட்டில் நுஸ்ரத் ஜஹானும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு பிறகு இருவரும் மாடல் அழகிகளைப் போன்ற ஆடைகளை அணிந்தபடி, பார்லிமெண்டின் முன்பாக நின்று, போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இதை பலரும் விமர்சித்தும், ட்ரோல் செய்தும், சிலர் பாராட்டியும் வருகின்றனர்.

Tags : #LOKSABHAELECTIONRESULTS #MIMICHAKRABORTY #NUSRATJAHAN