ஓடுங்க ஓடுங்க... 'அது' நம்மல நோக்கித்தான் வருது... சுற்றுலா பயணிகள் கண் முன்னே ஷாக்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் நாயை வேட்டையாடிய பெண் புலி வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரல் ஆகப் பரவி வருகிறது.
ரன்தம்போர் தேசிய பூங்கா வளாகத்தின் மிகவும் பிரபலமான புலி ‘சுல்தானா’. சுல்தானா புலி கண்களில் தென்படாத என அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தேடும் அளவுக்கு பிரசித்திபெற்றது. வழக்கம்போல் தேசிய பூங்காக்குள் சுற்றுலா பயணிகள் ஜீப்களில் காட்டுக்குள் பயணம் செய்து உள்ளனர். அப்போது விலங்குகள் ஏதாவது தென்படுகிறதா என அனைவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகளின் ஜீப்கள் முன்னே தெரு நாய் ஒன்று காட்டுப் பகுதிக்குள் சுற்றிக் கொண்டே இருந்தது. அப்போது திடீரென எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் பயணிகள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே புலி ஒன்று ஆக்ரோஷமாக நாயின் மீது பாய்ந்தது. சுற்றுலாப் பயணிகள் அலறத் தொடங்கினர்.
புலி உடனே நாயை கவ்வி தூக்கிக்கொண்டு புதருக்குள் மறைந்தது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி இந்த சம்பவம் தேசிய பூங்காக்குள் நடந்துள்ளது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணிகளும் ரன்தம்போர் தேசிய பூங்கா யூட்யூப் சேனலிலும் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் மக்கள், ‘வண்டியை ரிவர்ஸ் எடுங்க…’ என அலறுவது கேட்கிறது.
ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள் புலிகள் இதுபோல் நாயை வேட்டையாடினால் அது புலியின் நிலையைத் தான் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளனர். நாய்கள் காட்டு விலங்குகளுக்கு பெரிய அபாயம் தான் என்றும் தெரு நாய்கள் தேசிய பூங்காவின் காட்டு பகுதிக்குள் உலா வருவதை தடுப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.