உள்ள 'சிம்கார்டு' போட வேண்டாம், அதுக்கு பதிலா ஐபோன் 14-ல் அறிமுகமாகும் புதிய அம்சம்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தற்போது மொபைல் போன்களில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி இ-சிம் பதிவு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சிம் போடுவதற்கான ஸ்லாட் தான் செல்போன்களில் இடம்பெற்றிருந்தது. அதற்கு பின் இரண்டு சிம் போடும் வசதி வந்தது. மூன்று சிம் போடும் சில சீன போன்கள் வந்தாலும் ஒருகாலக்கட்டத்தில் இரண்டு சிம்கள் இருக்கும் ஸ்லாட் ஆண்ட்ராயிட் போன்களில் நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் முழு சிம் கார்டு போட்டு உபயோக்கிப்பட்டது.
இ-சிம்
அதற்கு பின் மைக்ரோ சிம் மட்டுமே பொருத்தப்படும் மொபைல் போன்கள் புழக்கத்தில் வந்தன. தற்போது நானோ சிம் மட்டுமே பொருத்தப்படும் போன்கள் உள்ளன. இந்நிலையில், ஐபோன் நிறுவனம் ஆரம்பம் முதலே ஒரு சிம் ஸ்லாட் மட்டுமே வைத்து வந்தது. இந்த நிலையில், முதல்கட்டமாக ஆப்பிள் ஐபோன்களில் சிம் கார்டுகளுக்கு இ-சிம் பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடியாக சிம் கார்டு இல்லாமல் இ-சிம் தொழில்நுட்பத்தில் புதிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய புரட்சி
இந்த இ-சிம் அம்சம் கொண்ட ஐபோன் 14 சீரியஸ் மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் போன் வெளியானால் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய புரட்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ-போன் 14
ஆப்பிள் ஐபோனை அடுத்து விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் இ-சிம் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டில் அறிமுகமாகப் போகும் ஆப்பிள் ஐ-போன் 14ல் சிறிய அட்டையில் வரும் சிம் கார்டுக்கு மாற்றாக உருவமற்ற மின்னணு சிம்கார்டு உபயோகத்திற்கு வரும்.
2018-ஆம் ஆண்டு அறிமுகமான ஐஃபோன் எக்ஸ் எஸ் மாடலில் இருந்தே இ-சிம் என்ற தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அளித்து வருகிறது. எனினும், அவற்றில் இ-சிம் தேர்வு செய்யப்பட்டாலும் நானோ சிம் கார்டுக்கான இடமும் இருக்கும். ஆனால், ஐஃபோன் 14-ல் சிம் கார்டு ஸ்லாட்டே இல்லாமல் இ-சிம் தொழில்நுட்பம் மட்டுமே இருக்கும் எனக் தகவல் வெளியாகியுள்ளது.