கொரோனா படுத்துறபாடு பத்தாதுன்னு இப்போ இதுவேறையா..! மர்மமாக இறந்த 250-க்கும் மேற்பட்ட காகங்கள்.. ‘பறவைக்காய்ச்சல்’ எச்சரிக்கை விடுத்த மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் மர்மமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் படாதபாடுபடுத்தி வரும் நிலையில், புதிதாக பறவைக்காய்ச்சல் பரவ தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட காகங்கள் பலியானதை தொடர்ந்து அங்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி குஞ்சிலால் மீனா கூறியதாவது, ‘தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அதிகமான பறவைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இறந்த பறவைகளில் பெரும்பாலனவை காகங்கள் என்று தெரிய வந்துள்ளது. இவை கோட்டா மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஜல்வாரில் காகம் இறப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை ஜல்வார் பகுதியில் 100, பாரன் பகுதியில் 72 மற்றும் கோட்டா பகுதியில் 47, பாலி பகுதியில் 19 மற்றும் ஜோத்பூரில் 7 காகங்கள் பலியாகி உள்ளன’ என அவர் தெரிவித்துள்ளார்.