சிந்தனை மூலம் செய்யப்பட்ட முதல் ட்வீட்.. திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பம்.. எப்படி சாத்தியம்?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கை மற்றும் உடல் பாகங்கள் என எதனையும் பயன்படுத்தாமல், தனது எண்ணங்கள் மூலமே ஒருவர் ட்வீட் செய்துள்ளது, தொழில்நுட்ப உலகில் மிகுந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ஒருவர் தனது உடல், கை என எதையும் அசைக்காமல், அவர்களின் எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்ற முடியுமா?. அதாவது, உடலை ஒரு இஞ்ச் கூட அசைக்காமல், சமூக வலைத்தளங்களில் எழுதவோ, அலல்து யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்ப முடியுமா?
முடியாது என்று தான் பலரும் கூறுவார்கள். ஆனால், அப்படி ஒரு ஆச்சரிய சம்பவம் தான் ஆஸ்திரேலியாவில் தற்போது நிகழ்ந்துள்ளது.
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... சமோசாக்குள்ள 'இத' எப்படிடா வச்சு சாப்பிடுறது..?
உடல்நிலை பாதிப்பு
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் பிலிப் ஓ கீஃப். கடந்த 2015 ஆம் ஆண்டு, விபத்து ஒன்றில் சிக்கிய பிலிப்பிற்கு, உடலில் சில நரம்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Amyotrophic Lateral Sclerosis (ALS) என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, பிலிப்பால் தனது உடலின் எந்த உறுப்பையும் அசைக்க முடியாது. அவரால், பேச நினைத்தால் கூட வாயை அசைக்க முடியாது.
மனவேதனை
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் கூட, இதே ALS வகை என்னும் குறைபாடு மூலம் தான் பாதிக்கப்பட்டிருந்தார். முன்னதாக, சமூக வலைத்தளத்தில் அதிக ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் பிலிப். இதனிடையே, கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல், மனதில் நினைத்ததை யாரிடமும் சொல்லக் கூட முடியாமல், சற்று மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.
முதல் ட்வீட்
இந்நிலையில் தான், 'Hello, World' என்ற ட்வீட்டை பிலிப் செய்துள்ளார். உடலில் எந்த உறுப்பையும் அசைக்கக் கூட முடியாத ஒருவர், எப்படி ட்வீட் செய்திருப்பார் என அனைவருக்கும் தோன்றலாம். மொபைல் போன், கணினி என எதையும் எடுக்காமல், வாய் திறந்து எதுவும் பேசாமல், பிலிப் தன் மூளையில் நினைத்த ஒன்றே ட்வீட்டாக மாறியுள்ளது.
மைக்ரோசிப்
பிலிப்பின் மூளையில், பேப்பர் கிளிப் அளவில், சிறிய மைக்ரோ சிப் ஒன்று, சில தினங்களுக்கு முன் பொருத்தப்பட்டது. இதன் மூலம், அவர் நினைக்கும் எண்ணங்களை எடுத்துக் கொள்ளும் சிப், அதனை எழுத்து வடிவமாக மாற்றுகிறது.
எப்படி சாத்தியம்?
அப்படி மாற்றிய எழுத்து வடிவம் தான், "hello, world! Short tweet. Monumental progress" என ட்வீட்டாக மாறியுள்ளது. கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள 'Synchron' என்னும் நிறுவனம், பிலிப்பிற்கான மைக்ரோ சிப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த உலகிலேயே, ஒருவரின் எண்ணத்தின் உதவியோடு, செய்யப்பட்ட முதல் சமூக வலைத்தள பதிவாக பிலிப்பின் ட்வீட் அமைந்துள்ளது.
தொழில்நுட்பத்தின் ஆச்சரியம்
உலகளவில் இந்த ட்வீட் அதிக அளவில் வைரலாகி வருகிறது. அதே வேளையில், உடலை அசைக்க முடியாத ஒருவரின் எண்ணங்களை, தொழில் நுட்பம் மூலம் பிரதிபலிக்கச் செய்துள்ளதால், டெக்னாலஜி உலகில் இது மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.