யப்பா...! ரெண்டு பேரையுமே 'லவ்' பண்ணியிருக்க...! இப்போ 'என்ன' பண்ண போறதா உத்தேசம்...? ஒண்ணும் 'பிரச்சனை' இல்ல, நான் 'முடிவு' பண்ணிட்டேன்...! - 'மாஸ்' காட்டிய 90'S கிட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 19, 2021 07:18 PM

தெலுங்கானாவில் ஒரு இளைஞர், தன் இரண்டு அத்தை மகள்களையும் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana fell in love with his two aunts and married

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் இருக்கும் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். பழங்குடியினத்தை சேர்ந்த அர்ஜுன் ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ள்ளார்.

அர்ஜுனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் ஒரு அதிர்ச்சிகர செய்தியை தன் வீட்டிற்கு தெரிவித்துள்ளார்.

அர்ஜுனின் தந்தைக்கு ஒரு சகோதரி உள்ள நிலையில் அவருக்கு இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அர்ஜுன் தன்னுடைய அத்தை மகள்கள் இருவரையும், ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார்.

இப்போது திருமணம் குறித்த பேச்சு தொடங்கவே  அர்ஜுன் அத்தை மகள்கள் இருவரையும்  காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது.

என்னதான் தாங்கள் ஏமாறியது தெரிந்தாலும், அந்த இரு பெண்களும் தங்கள் மாமா பையன் அர்ஜுனை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்துள்ளனர்.

Telangana fell in love with his two aunts and married

அப்போது உறவினர்கள் உன்னுடைய முடிவு என்ன என்று அர்ஜுனிடம் கேட்டுள்ளனர். உடனே அவர் அந்த இரு பெண்களையும் ஒரே சமயத்தில் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். பழங்குடியினத்தில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு அனுமதி இருக்கிறது என்பதால் அப்பகுதியில் இந்த சம்பவம் குறித்து எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. 

பொதுவாக 90- களில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடப்பதில்லை என்று கிண்டல் செய்யும் நிலையில் 90's கிட்டான அர்ஜுன் ஒரே நேரத்தில் இருவரை திருமணம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana fell in love with his two aunts and married | India News.