'அந்த' எடத்துக்கு போய்ட்டு வந்ததுல இருந்து 'ஆளே' மாறி போய்ட்டாரு... உண்மையை உடைத்த முன்னாள் உதவியாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்து இருக்கிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, ரியா சக்ரபோர்த்தி உடன் ஐரோப்பிய சுற்றுலா சென்று வந்தவுடன் ஆளே மாறிப்போய் விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.
2017-ம் ஆண்டு முதல் 2019 வரை சுஷாந்தின் உதவியாளராக இருந்த அங்கித் அவரை வேலையை விட்டு சுஷாந்த் நீக்கியதாக தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அக்கவுண்டில் அவர் 30 கோடி ரூபாய் வைத்து இருந்ததாகவும், சுஷாந்த் தன்னுடைய அறையை ஒருபோதும் பூட்டியது இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையே சுஷாந்தின் தந்தை, ரியா தன்னுடைய மகனை அவரது கட்டுப்பாட்டில் 3 மாதங்கள் வைத்து இருந்ததாக குற்றஞ்சாட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
