25,000 மேல் 'எடுக்க' முடியாது.. 'செலவுக்கு' காசு இல்லாமல்.. நகைகளை 'விற்கும்' நடிகை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 10, 2019 07:20 PM

ரூபாய் 25 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் இருந்து எடுக்க முடியாது என்பதால் நகைகளை விற்கும் நிலைக்கு நடிகை ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.

Actress Nupur Alankar sells jewellery to survive, Details Here

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  பஞ்சாப் & மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பி.எம்.சி வங்கி) மோசடியில் சிக்கியுள்ளது. இதனால் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரத்துக்கு மேல் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் இந்தி நடிகை நுபுர் அலங்கார் என்பவர் பணம் எடுக்க முடியாமல் தனது நகைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் நுபுர் வேறு வங்கிகளில் தான் வைத்திருந்த பணம் முழுவதையும் பி.எம்.சி வங்கிக்கே மாற்றிவிட்டார்.

தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடால் தனது பணத்தை எடுக்க முடியாமல் நண்பர்களிடம் பணம் வாங்கி செலவு செய்திருக்கிறார். எனினும் தொடர்ந்து நண்பர்களிடம் வாங்க முடியாததால் தற்போது தனது நகைகளை விற்கும் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags : #RBI