'டேட்டிங் ஆப்பில் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'ஒரு செகண்ட் யோசிக்காமல் இளைஞர் கொடுத்த போஸ்'... 'உடனே வந்த மெசேஜ்'... ஐடி இளைஞரை கதிகலங்க வைத்த இளம்பெண்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளைஞரிடம் இருந்த சபலத்தைப் பயன்படுத்தி 2 இளம்பெண்கள் செய்த செயல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வரும் 25 வயது இளைஞர் ஒருவர் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் டேட்டிங் செயலிகளை அவ்வப்போது பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இளம்பெண் ஒருவருடன் அந்த இளைஞருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை சுவேதா என அந்த பெண் அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், இருவரும் சேட் செய்யத் தொடங்கியுள்ளார்கள். பின்னர் அந்த பழக்கம் செல்போனில் பேசும் அளவிற்குக் கொண்டு சென்றது.
ஒரு கட்டத்தில் அந்த இளைஞரிடம் நெருக்கமாகப் பேசிய சுவேதா, 2 ரூபாய் ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தால், இளம்பெண்கள் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார்கள் என்றும் தனது தோழி நிகிதா என்பவர் கூட இந்த மாதிரி பேசுவார் என்றும் கூறியுள்ளார். இதனால் ஐடி இளைஞருக்குள் சபலம் உருவானது. அவரும் உனது தோழி நிகிதாவை என்னிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேச சொல் ' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து. நிகிதாவின் போன்-பே நம்பரை கொடுத்த சுவேதா, இந்த நம்பருக்கு ரூ.2 ஆயிரம் அனுப்பினால் அவர் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார் என்று கூறியுள்ளார். அதன்பேரில், போன்-பே மூலம் அந்த இளைஞர் 2 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பணத்தை அனுப்பிய சிறிது நேரத்தில் இளைஞரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தன்னை நிகிதா என்று அறிமுகம் செய்தார். பின்னர், வாட்ஸ்- ஆப்பில் வீடியோ கால் செய்யும்படி ஐடி இளைஞரிடம் கூறினார்.
அந்த இளைஞரும் வாட்ஸ்-ஆப்பில் வீடியோ கால் செய்தார். உடனே நிகிதா என்ற அந்த பெண், ''உங்களின் ஆடைகளைக் கழற்றி விட்டு நிர்வாணமாக நில்லுங்கள்'' எனக் கூறியுள்ளார். உடனே ஐடி இளைஞரும் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே ஆடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக வீடியோ காலில் நின்றுள்ளார். அப்போது எதிர்முனையிலிருந்த நிகிதா என்ற அந்த இளம்பெண், ஐடி இளைஞர் நிர்வாணமாக நின்றதை ஸ்கீரின் சாட் எடுத்து வைத்துக் கொண்டார்.
பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் ஐடி இளைஞரின் செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ''உனது நிர்வாண புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வெளியிடாமல் இருக்க எங்களுக்குப் பணம் தரவேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஐடி இளைஞரைத் தொடர்பு கொண்டு பேசிய நிகிதாவும், சுவேதாவும், ''நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடு, அல்லது உனது நிர்வாண படம் தான் அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்யில் இருக்கும்'' என மிரட்டியுள்ளார்கள்.
இதனால் பயந்து போன அந்த ஐடி இளைஞர் பல தவணைகளில் 16 லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனாலும் , தொடர்ந்து அந்த இளைஞரிடத்தில் பணம் கேட்டு நிகிதாவும், சுவேதாவும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விஷயம் வெளியில் தெரிந்தாலும் பரவாயில்லை, இப்படிச் செத்துச் செத்து பிழைப்பதற்குக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்த இளைஞர், நடந்த சம்பவம் அனைத்தையும் காவல்நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசார், அந்த இரண்டு இளம்பெண்களையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களே இதுபோன்ற வலையில் சிக்குவது வேதனையான விஷயம் என போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு நிமிட சபலத்தால் அந்த இளைஞர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தையும், வாழ்க்கையின் பாதி சந்தோசத்தையும் தொலைத்தது தான் மிச்சம்.