'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்க பாடகியான ரிஹானா ட்விட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

ரிஹானாவின் இந்த ட்விட்டர் பதிவு சர்வதேச அளவில் ஈர்க்கப்பட்டு கவனம் பெற்றது. அதன்காரணமாக அவரை தொடர்ந்து வெளிநாட்டு பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் ரிஹானாவின் பதிவிற்கு எதிராக இந்தியாவில் ஒரு சிலர் தங்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ரிஹானாவின் சொந்த ஊரான கரீபியன் நாடான பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley, தடுப்பு மருந்துகளை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ரிஹானாவின் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதை புறந்தள்ளி, பிரதமர் Mia Amor Mottley அவர்களின் கோரிக்கையை ஏற்று, சுமார் 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அந்நாட்டிற்கு இந்தியா அனுப்பி வைத்ததுள்ளது.
இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து, பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
