'அப்பாவிடம் இருந்து மகளுக்கு வந்த நோய்'... 'குடும்பத்தை காணமுடியாமல் பட்ட வேதனை'... ஆனா உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்த ஒரே ஒரு ஊசி !
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவ ரீதியாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வந்த சிறுமி ஒருவர் தற்போது தடுப்பூசியால் நிம்மதி அடைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் Muswell Hill பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் ரிச். 16 வயதான இந்த சிறுமிக்கு 'Inherited Spherocytosis' காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படும் அச்சம் கடுமையாக இருந்தது. இவருடைய தந்தையிடம் இருந்து இந்த நோய் வந்த நிலையில், எஸ்தரின் 5 வயதிலேயே அவருடைய மண்ணீரல் அகற்றப்பட்டது. சிறு வயதிலேயே இந்த பாதிப்புகளைச் சந்தித்த அவர், ஒவ்வொரு நாளையும் மிகுந்த எச்சரிக்கையுடனே கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேநேரத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த சூழ்நிலையில், உடலின் முக்கிய பாகமான மண்ணீரல் அகற்றப்பட்டதால் மருத்துவ ரீதியாக எஸ்தர் கொரோனாவால் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் கடந்த ஒரு வருடமாகத் தனது பாட்டி, நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் பார்க்காமல் தனிமையிலிருந்து வந்த அவருக்கு தற்போது தடுப்பூசி பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கடும் உற்சாகத்தோடு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட எஸ்தர், ஒரு வருடமாக நான் பட்ட வேதனைக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இனிமேல் எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த பயம் தேவையில்லை எனவும், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனது நண்பர்களோடு சுற்றுலா செல்ல முடியும் என உற்சாகத்தோடு கூறியுள்ளார். பாட்டியைப் பார்க்க முடியாமல் தவித்த எனக்கு, தற்போது அந்த கவலை என்னை விட்டுச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே மண்ணீரல் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது ரத்த அணுக்களைக் கட்டுப்படுத்துகிறது. அதேநேரத்தில் மண்ணீரல் அகற்றப்பட்டால் அதன் செயல்பாடுகளைக் கல்லீரல் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் கடுமையான நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
