"தடுப்பூசி போடலன்னா 'சம்பளம்' கட்.." 'அதிரடி' கண்டிஷன் போட்ட 'அரசு'.. எந்த 'STATE'ன்னு தெரிஞ்சுக்கோங்க..
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தியிருந்தது.
இதன் உருமாறிய வைரஸ்களும் மக்களை படாத பாடு படுத்தியிருந்தது. இந்த தொற்றில் இருந்து மக்களைக் காத்துக் கொள்ள வேண்டி, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியும் வந்தனர். கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்றின் தீவிரம், பல நாடுகளில் குறைந்து வந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் என்னும் தொற்று, பல நாடுகளில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல், இந்த தொற்று பரவியுள்ளது. டெல்டா வைரஸை விட அதிகம் வீரியம் உடையது என்றும், அதனை விட பல மடங்கு வேகமாக பரவும் ஆற்றல் உடையது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். நாளுக்கு நாள், இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் சுமார் 7 நாடுகளுக்கு மேல் வரை ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்து விட்டது.
இதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டி சில நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு, சம்பளம் வேண்டும் என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், 'அரசு ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.இது தொடர்பான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும்' என குறிப்பிட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, பஞ்சாப் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பின் அண்டை மாநிலமான ஹரியானாவில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு உணவகங்கள், வங்கி, வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.