'அந்த கடும் குளிர என்னால மறக்க முடியாது'...'இந்தியாவை' திரும்பி பாக்க வச்ச '23 வயசு' பொண்ணு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 17, 2019 03:58 PM

மிக இளம் வயதில் எவரெஸ்ட்டை எட்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்,23 வயதான ஷீத்தல் ராஜ் .

Sheetal Raj becomes yougest women to scale Mt Everest

சிறுவயது முதலே மலையேறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஷீத்தல் ராஜ், மலையின் உயரம் தன்னை எப்போதுமே ஆச்சரியப்படுத்தும் என தெரிவித்தார். மலைகளின் உயரத்தை ஒரு முறையாவது தொட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதுமே உண்டு என குறிப்பிட்டுள்ள அவர்,அதற்காக தினமும் கடுமையனாக பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.இதனிடையே அதிகாலை 3.30 மணிக்கு கடும் குளிரில் இமய மலைச் சிகரத்தை எட்டிய அந்த தருணத்தை,எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என கூறினார்.

மலையினை ஏறி வந்துவிட்டேன் ஆனால் இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. இதனால் விடியும் வரை காத்திருந்து அதன் பின்பு தான் சிகரத்தை எட்டியதை அறிந்து கொண்டதாக,தனது மலையேற்றம் குறித்து நினைவு கூர்ந்தார்..ஒருபுறம் நேபாளம், மறுபுறம் இந்தியா முன்னால் சீன எல்லை என்று கண்ட காட்சி மறக்க முடியாதது என்றும் ஷீத்தல் தெரிவித்துள்ளார்.இதனிடையே மிக இளம் வயதில் எவரெஸ்ட்டை எட்டிய இளம் பெண் என்ற பெருமை ஷீத்தலுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் கஞ்சன் ஜங்கா மலைப்பகுதியில் சிகரத்தைத் தொட்டு நிகழ்த்தப்பட்ட சாதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனையடுத்து உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தர் சிங், ஷீத்தலை பாராட்டி பரிசு தொகையினை வழங்கினார்.

Tags : #UTTARAKHAND #SHEETAL RAJ #MT EVEREST