லாட்டரி குலுக்கலில் விழுந்த ரூ.9 கோடி.. மகிழ்ச்சியில் டிக்கெட்டை தேட வீடு வரும் இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 27, 2019 06:18 PM

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு துபாயில் 9 கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளது.

Kerala youth wins Rs 9 crore from lottery

கேரளாவைச் சேந்த முகமது அஸ்லாம் என்ற 31 வயதான இளைஞர் ஒருவர் துபாயில் உள்ள ஷார்ஜாவில் கடந்த 12 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார். இவர் துபாயில் லாட்டரி சீட் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது நடந்த லாட்டரி குலுக்கலில் முகமது அஸ்லாமுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய். ஆனால் லாட்டரி டிக்கெட் தற்போது அஸ்லாமிடம் இல்லாததால், கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு தேட துபாயில் இருந்து புறப்பட இருக்கிறார்.

லாட்டரி பரிசு விழுந்தது பற்றி கூறிய அஸ்லாம்,‘லாட்டரியில் பரிசு விழுந்ததாக அதிகாரிகள் சொன்னதும் என்னால் நம்ப முடியவில்லை. என் பெற்றொர் செய்த பிரார்த்தனையின் பலனாகத்தான் இந்த பரிசு எனக்கு கிடைத்துள்ளது. என்னுடைய குடும்பத்தினரை ஐக்கிய அமீரகத்திற்கு அழைத்து வந்து சுற்றிக் காட்டவேண்டும் என்பதே என் ஆசை’ என அஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இவர் துபாயில் லாட்டரி பரிசு வென்ற 139 -வது இந்தியர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #DUBAI #KERALA #LOTTERY