எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு டாக்டர்...! உங்களுக்கு வந்துருக்கது 'அந்த' வியாதி தான்...! '1.47 கோடி ரூபாய் கொடுத்தீங்கன்னா சரி பண்ணிடலாம்...' - டாக்டர் செய்த மொரட்டு தில்லாலங்கடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் பெண் ஆடிட்டருக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி சுமார் 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசிப்பர் 58 வயதான சுஷ்மா ஜாதவ், பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக பணியாற்றி வரும் இவர், வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் தனக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என வனாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில், கடந்த 2017-ம் ஆண்டு நண்பர் ஒருவரின் மூலம் தான் மருத்துவருக்கு சுஷ்மா ஜாதவ் அறிமுகமாகி இருந்ததாகவும், அப்போது அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் சோர்வு குறித்து மருத்துவரிடம் சுஷ்மா ஆலோசனை பெற்றுள்ளார். அதில் சுஷ்மாவுக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி வித்யா சிகிச்சைக்காக மட்டும் சுமார் 1.47 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பணத்தை சுருட்டிக்கொண்ட மருத்துவர் வித்யா சுஷ்மாவிற்கு முழங்கால் வலி சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையறிந்த சுஷ்மா யாதவ், தன்னை ஏமாற்றிய வித்யா குறித்து பல டாக்டர்களிடம் கேட்டதில் அவர், கனடாவை மையமாக கொண்டு செயல்படும் ஆயுர்வேத நிலையத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 1.47 கோடி ரூபாய் மோசடி செய்த வித்யா மீது போலீசில் புகார் அளித்தார். தற்போது அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.