மிஸ் யுனிவர்ஸ் பத்தி 'இந்த விஷயங்களை' தான்... நெட்டிசன்கள் 'கூகுள்'ல வளைச்சு வளைச்சு தேடியிருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியா21 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு லாரா தத்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இந்த நிலையில். 21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் எய்லாட் நகரில் நடந்த கண்கவர் போட்டியில் அவருக்கு இந்தப் பட்டம் சூடப்பட்டது. முதல் ரன்னராக பராகுவே நாட்டின் அழகியும், இரண்டாவது ரன்னராக தென் ஆப்பிரிக்க நாட்டின் அழகியும் தேர்வு செய்யப்பட்டனர்.ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1994-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மிஸ் யூயுனிவெர்ஸ் அழகுப் போட்டியில் சுஷ்மிதா சென் கலந்துக்கொண்டு மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்திய அழகி என்ற வரலாற்றை உருவாக்கினார்.
அதன் பிறகு, கடந்த 2000-ஆம் வருடம் லாரா தத்தா அந்தப் பட்டத்தை கைப்பற்றினார். இப்போது 21 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரைக் குறித்து நெட்டிசன்கள், கூகுள் சர்ச்-இல் அதிகம் தேடியது என்ன தெரியுமா?
கூகுள் சர்ச்-இல் ‘Harnaaz Sandhu’ என டைப் செய்தால் அவருடைய மதம், குடும்பம், எடை, உயரம், பிறந்த தேதி, வயது, பிகினி, பயோகிராபி, இன்ஸ்டாகிராம் பக்கம் மாதிரியானவை குறித்துதான் நெட்டிசன்கள் அதிகம் தேடி தெரிந்துக் கொண்டுள்ளார்கள்..
அதுமட்டுமல்லாமல், மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன்னர் அவரை இன்ஸ்டாகிராமில் வெறும் 2.9 லட்சம் ஃபாலோயர்கள் தான் பின்தொடர்ந்து உள்ளார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக மாறியுள்ளது. மாடலான ஹர்னாஸ் இரண்டு பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார்.