அந்த ஒரு கேள்வி... மனம் வெதும்பிய ஹர்னாஸ்..!- மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைச்சதே அந்த பதிலுக்குத்தானே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக இந்தியா சார்பில் பங்கேற்ற ஹர்னாஸ் சந்து, ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்றுள்ளார்.
இதையொட்டி அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டம் என்பது உலக அளவில் அழகாக இருக்கும் பெண்ணுக்கு மட்டும் கொடுப்பதல்ல. இறுதிச் சுற்றுகளின் போது போட்டி அதிகமாகும் போது, பங்கேற்பாளர் தற்கால உலகின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாக பதில் சொல்ல வேண்டும். அழகுடன் இப்படி அறிவுத் தகுதியும் இருக்கும் பெண்ணுக்குத் தான் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி எனப்படும் ‘மிஸ் யூனிவர்ஸ் பட்டம் கொடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இறுதிச் சுற்றின் போது ஹர்னாஸ் சந்துவிடம், ‘தற்போது உள்ள இளம் பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய அறிவுரை என்னவாக இருக்கும். அவர்கள் சந்திக்கும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஹர்னாஸ், ‘தற்போதுள்ள இளம் சமூகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை தன்னம்பிக்கை. தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு அல்லாடுகிறார்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிடுவதை முதலில் நிறுத்தங்கள். உங்களுக்காக நீங்கள் தான் முன் வந்து பேச வேண்டும். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் தலைவன். நான் என் மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால் தான் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் ஹர்னாஸிடம், புவி வெப்பமாதல் குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. கால நிலை மாற்றத்தை இன்னும் பலர் ஏற்க மறுப்பது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு ஹர்னாஸ், ‘இயற்கை பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாவதைப் பார்த்து என் மனம் வெம்புகிறது. நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தான் இயற்கை கஷ்டப்படுகிறது. நாம் பேசுவதை குறைத்துவிட்டுச் செயலில் இறங்க வேண்டும். நம் ஒவ்வொரு செயலும் ஒன்று இயற்கையை கொன்றுவிடும் அல்லது அதைக் காப்பாற்றும்.