'இணையவாசிகளுக்கு நல்ல செய்தி..'. 'நெட்ஃபிளிக்ஸ்', 'ஃபேஸ்புக்' அறிவித்த 'புதிய அறிவிப்பு...' 'இணைய செலவைக் குறைக்க ஏற்பாடு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 25, 2020 08:42 PM

"இணையவாசிகளுக்கு ஏதுவாக வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இணைய செலவை குறைக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

netflix facebook and instagram reduce streaming quality

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துபொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

வீட்டு வேலைகள், சமையல் போன்ற வேலைகளை செய்தாலும் பொதுமக்கள் டிவி, இணையத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும், வீட்டிலிருந்தபடியே வேலைபார்ப்பவர்களுக்கும், இணையம் பெரிதும் தேவையாக உள்ளது. பிடித்த படங்களை பார்ப்பது, தொடர்களை பார்ப்பது என இணையவாசிகள் தங்கள் நேரங்களை செலவழிக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏதுவாக இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க சில நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தரத்தை தற்காலிகமாக குறைக்கிறோம், இது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.  இதன்மூலம் இணையவாசிகள் இணைய செலவைக் குறைக்க முடியும்.

Tags : #WORK FROM HOME #FACEBOOK #INSTAGRAM #NETFLIX #VIDEO STREAMING