ஏர்போர்ட்ல இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்துல விமான எஞ்சினில் ஏற்பட்ட சிக்கல்..கலவரமான கண்ட்ரோல் ரூம்.. பைலட் எடுத்த அவசர முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் மீண்டும் அவசரமாக தரையிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 9.43 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா A320neo விமானம் 10.10 மணிக்கு மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. விமான எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாகவே விமானம் உடனடியாக தரையிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் பயணத்தை துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே, அதன் ஒரு எஞ்சினில் எக்ஸ்சாஸ்ட் பகுதியில் அதீத வெப்பம் உருவாகி வருவதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார் விமானி.
அதன் பிறகு வேறு விமானம் மூலமாக பயணிகள் பெங்களூரு நகரத்திற்கு சென்றடைந்ததாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்," ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும். எங்களது விமான குழுவினருக்கு இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி? என்ற அனுபவம் அதிகமாக இருக்கிறது. எங்களது பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுக்கள் இந்த சிக்கலை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த மக்கள், வேறு விமானம் மூலமாக பெங்களூரு சென்றடைந்தது" என்றார்.
விசாரணை
விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம், உடனடியாக தரையிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா A320neo விமானம் பயணத்தை துவங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிக்கப்பட்ட நிகழ்வு குறித்து மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
