’டெட் பாடி’யோட உடலுறவு...! - பொம்மை வாங்க போன எடத்துல சண்டை...' ‘கழுத்தறுத்து கொன்னு... 'பிக் அப்' வேன்ல போட்டுட்டு ஆள் எஸ்கேப்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜூன் மாதம் கடந்த 26 ஆம் தேதி மும்பையின் நாலசோபராவில் (கிழக்கு) 32 வயதான பெண் ஒருவர் வீட்டிற்கு தேவையான மாளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். மேலும் தன் பெண் குழந்தைக்கு பொம்மைகளை வாங்க விரும்பியதால் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்றார்
![Mumbai nalasopara dead body rape sex in shop body found van Mumbai nalasopara dead body rape sex in shop body found van](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/mumbai-nalasopara-dead-body-rape-sex-in-shop-body-found-van.jpg)
அதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால், அவரின் கணவரும் வீட்டில் வேலை செய்யும் பால்காரரும் சேர்ந்து காணாமல் போன பெண்ணை தேடியுள்ளனர். ஆனால் எங்கே தேடியும் கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி, நாலசோபராவில் (கிழக்கு) சந்தன் நாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிக்-அப் வேனுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போன 32 வயது பெண்மணி சடலமாக மீட்கப்பட்டதாக அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்மணி கழுதை நெரித்து கொல்லப்பட்டதாகவும், மேலும் அவர் இறந்த நிலையில் கற்பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து முதற்கடுத்த விசாரணையில் சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் பரிசோதனையில் செய்ததில், அவர் பொம்மை கடைக்கு சென்றது தெரியவந்துள்ளது. பொம்மை கடை உரிமையாளரிடம் விசாரித்ததில், பொம்மை விலை தொடர்பாக ஜூன் 26 அன்று கடை உரிமையாளருடன் அந்தப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வாக்குவாதத்திற்குப் பிறகு, கடையின் உரிமையாளர் அந்த பெண் தலை முடி பிடித்து இழுத்து கடைக்கு பின்னால் அமைந்துள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கழுத்து நெரித்து கொன்றதாக கூறியுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து, அந்த நபர் இறந்துபோன சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதையடுத்து அந்தக் கடைக்காரர் இரவு வரை இறந்து போன உடலுடன் தங்கியிருந்து, நடுஇரவில் இறந்துபோன பெண்ணின் உடலை பிளாஸ்டிக் கவரில் மூடி நிறுத்தப்பட்டிருந்த வேனில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.
கடைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களையும் அக்குடும்பத்தாரையும் சோகத்திலும் அதிர்ச்சிலும் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)