"அண்ண மாதிரி நெனச்சு தானே உதவி கேட்டேன்... இப்படி, சித்ரவதை செஞ்சு... சின்னா பின்னமாக்கிட்டீங்களே...!" - ஓடும் காருக்குள் வைத்து... ’17 வயது’ சிறுமிக்கு நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு தப்பியோடி மும்பை வந்தடைந்துள்ளார்.

பின்னர், திரும்ப வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத அந்த சிறுமி, மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு உடன் பணிபுரிந்த 18 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்த சிறுவன், ஹோட்டலின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். இது தொடர்பாக சிறுமி மீது சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தினர். தொடர்ந்து சிறுமியை சிறுவர் பள்ளியில் போலீசார் சேர்ந்திருந்த நிலையில், அங்கு சிறுமிக்கு அடிக்கடி உடல்நடல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
ஆனால், அங்கிருந்து சில தினங்களுக்கு முன் சிறுமி தப்பித்து சென்ற நிலையில், அவரை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், தப்பித்து சென்ற சிறுமி, புனேவுக்கு செல்ல முடிவு செய்த நிலையில் பேருந்து நிலையம் அருகே வந்துள்ளார். அவரிடம் கையில் காசு இல்லாத நிலையில், அங்கிருந்த டாக்சி டிரைவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்சி டிரைவர் ஒருவர், சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து புனேவில் இறக்கி விடுவதாக கூறி டாக்சிக்குள் ஏற்றியுள்ளார்.
அப்போது டாக்சி ஓட்டுனரின் நண்பரும் உடன் இருந்ததாக தெரிகிறது. ஓட்டுனரை நம்பி ஏறிய அந்த சிறுமியை கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே காரில் இருந்த இரண்டு பேரும் மாறி மாறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அச்சத்தில் சிறுமி அலறித் துடித்த நிலையில், பணியில் இருந்த போலீசார் உடனடியாக காரை விரட்டிப் பிடிக்க ஆரம்பித்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு வண்டியின் அடையாளங்களை அறிந்து கொண்ட போலீசார், அதன் உதவியுடன் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து செய்து சிறுமியை மீட்டனர்.
17 வயது சிறுமியை டாக்சி ஓட்டுனர்கள் மாறி மாறி பாலியல் வன்கொடுமையை ஈடுபட்ட சமத்துவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
