'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் என்று வரும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். வாழ்க்கையில் அது மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதற்காகப் பலரும் சிறப்பான திட்டமிடலுடன் அதனை நடத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா எல்லாவற்றையும் அடியோடு மாற்றி விட்டது. கொரோனா அச்சம் காரணமாக 50 பேருக்கு அதிகமாகத் திருமண நிகழ்வுகளில் யாரும் பங்கேற்கக் கூடாது என்பது அரசின் விதியாகும். இதனால் பல திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த எரிக் - மெர்லின் ஜோடிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணத்தை வெகு ஆடம்பரமாக நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக வெறும் 22 பேர் பங்கேற்கத் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையேடு இந்த ஜோடி வீட்டிற்குக் கூட செல்லாமல் ஊரகப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்குச் சென்றார்கள்.
புதுமண ஜோடி வீட்டிற்குச் செல்லாமல் ஏன் அங்குச் செல்கிறார்கள் என உறவினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்குச் சென்ற புதுமண ஜோடி, தனிமைப்படுத்தல் முகாமிற்கு 50 படுக்கைகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வழங்கினார்கள். திருமணத்திற்கு அதிகம் செலவு ஆகாத நிலையில், அந்த பணத்தை இதுபோன்று நல்ல காரியத்திற்கு வழங்கிய ஜோடியின் செயலை பார்த்த உறவினர்கள் வாயடைத்துப் போனதோடு, அவர்களை மனதார பாராட்டினார்கள்.

மற்ற செய்திகள்
